மாற்றம் கொணரவே...!!!

Share

Started writing this poem out of boredom, and was frustrated when it got deleted, by mistake...! Later, started again and finished it somehow...!

This might not be having a proper flow of sentences or even logic, for that matter... But a sincere attempt to create at least a percentage of awareness of social evils...

Comments & Criticisms welcome...! Please...! :)

மாற்றம் கொணரவே...!!!

களவும் கற்று களவாடச் சொல்லும்
களங்கமில்லாக் சமூகமிது...!

மனிதரை மனிதன் சமைத்துண்ணும்
மானுடமில்லா உலகமிது...!

பாரி தேர்தந்த பரிதிநிலித்தினில்
பாவிகள் திரியும் நிலைமையிது...!

குப்பைத் தொட்டியில் குழந்தை(யை) எறியும்
குள்ளநரிகள் கூட்டமிது...!

சாதிகள் சூழ்ந்து சூழ்ச்சிகள் செய்யும்
சமத்துவமில்லாச் சங்கமிது...!

வெவ்வேறு நிறங்க ளிருந்த போதிலும்
வருமையாய்த் திகழும் வெறுமையிது...!

கோடி சனங்களும் கோடி மதங்களும்
தனிக்கொடியேந்தும் தலைமையிது...!

வேற்றுமையில் ஒற்றுமை காணவே வேரோடு
பிடுங்கும் வெறிகொண்ட வேட்கையிது...!

சேரரும் சோழரும் கூவித்த கூற்றுகளை
கூறிடத் துணியும் கூவலிது...!

விருந்தோம்பல் இல்லாததோர் வீடுமில்லாத
விருத்தியே வழிகொண்ட விருக்ஷமிது...!

வந்தாரை வாழவைத்தது மட்டுமல்லாது
தான் மாண்டு தோளுயர்த்திய தேசமிது...!

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வமேயென
கல்வியே கண்ணான கண்டமிது...!

இயேசுவு மல்லாவும் நம் பெருமானும் கூட
கைவிட நேரிடும் காலமிது...!

கருமமே கண்ணான உழைக்கும் வர்க்கங்கூட
கருமங்கள் எண்ணும் நிலைமையிது...!

ஏழையை அடித்து ஏற்றமே காணும்
ஏவல் காரர்கள் எத்தனை பேர்...!

காக்கைக்கும் சோறிட்டு பின்புண்ணும் நம்மரபை
நினைவில் கொள்வோர் எத்தனை பேர்...!

கேளடா மானுடா கேட்டபின் கொள்ளடா
கண்டங்கள் துண்டாக்கும் கண்களைக் கொல்லடா...!

மதத்தின் பெயரால் மதம்பிடித்தோனை
மாய்க்கும் மண்ணென முறை நீ கொள்ளடா...!

வையத்தில் ஞானத்தை வாரி வழங்கிய
வம்சம் என்று நம் பெயர் சொல்லடா...!

நீரும் நிலமும் எனதென்று கொற்றாமல்
நன்மைக்கு நமதென்று நமதாக்கவே...!

வானும் வயலும் சீராக்கி இன்றுள்ள
வறுமையில்லாததோர் நிலை கொணரவே...!

மரணமே என்றாலும் நெஞ்சினில் வேல்கொண்ட
வீரத்திலொரு பங்கு அதுவாவது கொள்...!

சமுதாய சீர்கேடு கண்டுமே காணாத
ததுவல்ல நம் குணம் எனக்கொண்டு நில்...!

வீரத்தில் தமிழர்க்கு நிகரேதுமில்லாத
வானுலகம் சென்று உன் புகழ் உரக்கச் சொல்...!

நாளை எனதென்று நலிந்து போகாமல்
இன்றே நமதென்று நிமிர்ந்து நீ நில்...!


P.S: A gentle reminder... Comments & Criticisms welcome...! Please...! :)

Comments

bhaaradwaaj said…
good one da... keep writing....

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Kuru kuru kangalile...

Out at the Lakes