கல்வெட்டுக் காகிதம்

Share

Wrote this poem, taking half-an-hour from 1:30 to 2:00 AM, with an exam next morning by 9...! :)
forced myself to do some "quality" work this time, squeezed my little brain & came up with this...! :)

கல்வெட்டுக் காகிதம்

ஓரிரவு கனவில் உன்மதியை நான் கண்டு
மறுதுயில் கனவில் உனைக்காண மறவாது
கதிரவன் கண்டும் கண்ணிமை மூடாது
கனவும் கனவாய்ப்போன கதையொன்று கேளாய்...!

மதிகள் பலகூடி மதியொன்று தானாக்கி
சதியும் ஆள்சேர அம்மதியின் உரு கண்டு
மதியைத் தொலைத்த என்விதியில் நிம்மதியை
மீட்டுத் தரஇயலும் மதியுளர் யார் ? கூறாய்...!

இவளும் அவளும் எவளும் பாராப்
பவளம் போன்ற உள்ளம் கொண்டு
கவளம் வைரம் ஜொலித்தார்ப் போல
இவளும் இங்கே ஒளிக்கக் கண்டு

தேவரும் வீரரும் (உன்) ஓர்புறம் தான்காண
போர்க்களம் புறம்தந்து உன்புறம் உடன்வந்து
மணக்கோலம் ஏந்தவே ஒருவரம் தாராமல்
மறுபுறம் நீ செல்ல இருபுறமும் இரவுகளே...!

இத்தனை அழகுள்ள சௌபாக்யவதியவளை
துர்பாக்யவதியாக்க மனமின்றி நான் குமுற
"மனதிற்கே மதியுண்டு அம்மனது உம" தென்று
அவள் கொள்ள இன்றவள் அடியேனின் திருமதியே...! :)

                                                                                     - வ.ர.ராகவன்.

P.S: Comments & Criticisms welcome...! :)

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Kuru kuru kangalile...

Out at the Lakes