வாளின் வாழ்க்கை

Share

Started writing this poem in Bangalore, on "sighting" some Kannada (?? not sure...! ??) figure...! :)
then jus developed it into something... :)

                                  வாளின் வாழ்க்கை

பாஷையொன்றும் அறியாது
பார்வையின் அர்த்தம் புரியாது
கண்ணிமை ஜாடை மறவாது
உன்னிடம் பேசத் துடித்தேனடி...!

அணிந்தவுடன் ஆடைகள் சிறப்படைய
காலணிகள் பிறவிப் பயனடைய
காலடிகள் சுரங்கம் உருவாக்க
தூசியாய் மாறத் தவித்தேனடி...!

கண்களின் நிறம்கண்டு மைக்கூடும் ஏங்க
மேனியின் ஒளிபட்டு கதிரவன் தூங்க
நீரோடை கருத்தார்ப்போல் கூந்தலும் மிளிர
அழகெனும் பாசியை அப்பிக் கொண்டேனடி...!

வார்த்தை ஒன்றினை உன்முகம் கூறிட
பாவமென் மனதினைக் கோடியாய்க் கூறிட
தோல்வியே காணாத குழந்தையுள்ளம்தனை
தண்ணீரில் தத்தளிக்கும் தோணியாய்க் கவிழ்த்தாயடி...!

பாதியுடையணியும் காலத்துப் பெண்டிருள்
பாவாடையணியும் தேவதை மறவேனே
பிசிராந்தையாருக்குப் போட்டியாய் இருந்தவனும்
காதல் தோல்வியில் பிசிராகிப் போனேனே...!

மீசையும் தாடியும் கேசமே என்றாலும்
திருத்தம் தேவையென புத்தியும் அறிந்திருந்தும்
வெடித்த அணு ஒவ்வொன்றிலும் உன்முகம் இருந்தாலும்
வசந்தமே வலுகொண்ட வாழ்க்கைக்கு வழியேதடி...!

கடலின் வாழ்க்கையில் ஓர்துளி தேனுக்கு
ஆசைப்பட்டதன் விளைவிங்கு என் உருவில்.
போராட்டம் காணாது பொற்கொடி உன்னைக் கண்டதற்கு
கோடிப் பிணங்களின் நாற்றமே என் கனவில்...!

பளுதூக்கும் யானைக்குப் பகுத்தறிவு வந்தாலும்
பாகனின் அங்குசம் பிணியாக இருப்பதுபோல்
இல்லை என்றறிந்து இனிதாக இருந்தாலும்
இனிமேல் என்வாழ்வில் இன்னாவே இருக்குமடி...!

P.S : Regret for spelling mistakes (if any...!)
P.P.S: Comments & Criticisms welcome...! :)

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Belur & Halebidu - II

Kuru kuru kangalile...