சுமைதாங்கிச் சித்திரம்

Share

Was frustrated over a lot of things, so felt like writing somethin sad...!
Had this theme of a husband's sorrow over his wife who's no more...!
Not sure if it has come out well, but still... jus felt like writing something & was actually feeling better on completion...!!! :)


                                  சுமைதாங்கிச் சித்திரம்

சுமைதாங்கிக் கல்லாய் சுகம்தர நானிருந்தேன்
சுடரொளியாய்ப் பூச்சூடிக் கரம்தர நீஇருந்தாய்
பிள்ளைக்குத் தந்தையாய்த் தமையனாய் நானிருந்தேன்
அன்பிற்கு அன்னையாய் அனைத்துமாய் நீஇருந்தாய்...!

தோழனாய்த் தோளினைத் தந்தபின் தாரமாய்த்
தன்னையே தானமாய்த் தந்துநீ வாடினாய்
சோகக் கடலினில் மூழ்கிநான் இருக்கையில்
மோகக் கடலினைத் தந்துபுண் ஆற்றினாய்...!

ஔவியம் பேசவும் ஔடதம் அளிக்கவும்
அனாதை எனக்கினி யார் வருவார்...?
பாசம் பொழியவும் பரிவு காட்டவும்
பாவி எனக்கென எவர் வருவார்...? :(

பிள்ளைக்கு நற்குணம் அனைத்தும் தேற்றி
அறவனைப்பையும் அன்றடம் ஊட்டி
அழுகைக் குறலையும் அன்பால் ஏற்று
அளவிலா ஆனந்தம் பெறச் செய்தாயடி...!

செல்வத்தினால் சோறும் இட்டு
சரீரத்தினால் சுகமும் தந்து
நித்தமும் வேலைப் பளுவும் பெற்று
மனதிற்கும் நிலையினை நட்டுவைத்தாயடி...!

நீஇலா புவியினில் நான்மட்டும் இனிஎதற்கு...?
மனதே மாய்ந்தபின் மண்தினும் உடலெதற்கு...?
அவ்வுலகம் காண எத்துணையும் உனக்கில்லை
இவ்வுலகம் எதிர்கொள்ள எத்திணையும் எனக்கில்லை...! :(

ஐந்திணை உவமைக்கு தேகத்தில் தெம்பில்லை
உள்ளுரை உடன்கூற உள்ளத்தில் உரமில்லை
இயந்திரம் இழுத்தார்ப்போல் ஐம்புலனும் அரையுதடி...!
கண்ணீரைத் துடைக்கக்கோறி எழுதுகோலும் கலங்குதடி...! :(

P.S: As usual, Comments & Criticisms welcome...! :)

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Belur & Halebidu - II

Kuru kuru kangalile...