பாட்டு ஒன்னு பாடு தம்பி

நான் ஒரு தீவிர கமல் ரசிகன். சொல்லப்போனால், வெறியன். பாலச்சந்தர், எஸ்.பி.பி மற்றும் எம்.எஸ்.வி. ரசிகன். மேலும், எஸ்.வி.சேகரையும் சிறு வயதிலிருந்தே பிடிக்கும். சமூக உணர்ச்சி பீரிட்டு பொங்கிவிடாவிட்டாலும், ஏதோ ஓர் மூலையில் ஏதாவதொரு மாற்றத்துக்காக  துடித்துக் கொண்டிருப்பவன். இப்படியிருக்க, "வறுமையின் நிறம் சிவப்பு" போன்ற ஒரு படத்தை, ரசிக்காமல் இருப்பது முடியாத காரியம். இப்படத்தை விமர்சனம் செய்ய அறுகதை இல்லாத காரணத்தால், மேற்கொண்டு ஏதும் கூறாமல் இருப்பதே உசிதம் எனக் கருதுகிறேன்.

சிறு வயதில் இப்படத்தைப் பார்த்துள்ளேனே தவிர, பெரிதாய் ஒன்றும் ஞாபகம் இருந்ததாய்த் தோன்றவில்லை. சமீபத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. படத்தின் இடையே இரண்டு முறை கண்ணீர் விட்டேன் என்ற உண்மையைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. இப்படத்தில், குறிப்பாக, "பாட்டு ஒன்னு பாடு தம்பி" என்ற பாடல், இன்றளவும் சமூகத்திற்கு இவ்வளவு பொருத்தமாக இருப்பது, வியக்கத் தக்கதா இல்லையா என்ற வாதத்தை இப்போதைக்கு ஒற்றி வைத்து விட்டு, அதைக் கேட்கவும், உடன் பாடவும். முடிந்தான் சிறிது யோசிக்கவும் ஒரு 5-நிமிடங்கள் செலவிடுவது பெருங்குற்றமல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு: இதுவரையிலோ / இனிமேலோ எழுத்துப் பிழை ஏதேனும் இருப்பின், பொறுத்துக்கொள்ள வேண்டியது உங்கள் நிலைமை. அதோடு நிற்காது, திறுத்த வேண்டியது கடமை.


பாடல்        : பாட்டு ஒன்னு பாடு தம்பி
பாடகர்       : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இசை          : எம்.எஸ்.விஸ்வநாதன்
படம்          : வறுமையின் நிறம் சிவப்பு
இயக்குனர்  : கே.பாலச்சந்தர்பாட்டு ஒன்னு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்.
பாரதத்தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி,
பாரதத்தின் பெருமை தன்னை பாடு, பாடு, சோறு எதுக்கு தம்பி ! (2)

வந்தார வாழ வச்சு, சொந்தங்கள ஏங்க வச்சு 
பூமியெங்கும் பேரெடுத்தோமே, தம்பியப்போ !
ஊர் முழுதும் புத்தி சொன்னோமே...

பட்டணத்து வீதியிலே பட்டம் பெற்ற ஆணும் பெண்ணும்,
இட்டிலிக்கும் தோசைக்குமா சுத்தி சுத்தி வாராரப்பா !
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதம் தான்னு சொல்லுங்கப்பா !

(பாட்டு ஒன்னு)

வற்றாத கங்கை என்றும், வாகான பொன்னி என்றும்,
கட்டாத ஆளில்லையப்பா, ஆனாலும்,
கத்தாழை விளையுதேயப்பா !

நாம் பொறந்த சீமையிலே நாம செஞ்ச பாவம் இல்லே
நாம் பொறந்த சீமையிலே நாம செஞ்ச பாவம் இல்லே
அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசை வந்த தோஷமப்பா

அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசை வந்த தோஷமப்பா
கங்கையிலே முழுகிவிட்டு காவி கட்டி போவோமப்பா!

(பாட்டு ஒன்னு)

ஊரெல்லாம் பிள்ளையப்பா உள்வீடு நிறையுதப்பா
கூரையிலும் தொங்குதேயப்பா, இனிமேல்,
கூப்பிடவே பேரில்லையப்பா !

பள்ளியிலே இடமும் இல்லே, படிச்சு வந்தா வேலை இல்லே
பள்ளியறை மட்டும் சும்மா பட்டு பட்டு தெரிக்குதப்பா
ஆண்டவன் மேல் பழிய போட்டு அடிவயித்த தடவுங்கப்பா !

(பாட்டு ஒன்னு)

Comments

Veera said…
Very Nice Movie :-)

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Kuru kuru kangalile...

Out at the Lakes