Posts

Showing posts from December, 2012

உன்னைக் கண்டேன் பெண்ணே

Image
கர்நாடக சங்கீதத்தில் எனக்கு ஈடுபாடு  மிகவும் அதிகம். எவ்வளவு அதிகம் என்றால், நான் நுழைந்து அதை அவமரியாதை செய்யக் கூடாது - என்ற அளவுக்கு அதிகம். எனக்கு 7 அல்லது 8 வயது இருக்கும்போது, முதல் முறையாக நானும் என் தங்கையும் "பாட்டு  க்லாஸ்" சென்ற ஞாபகம். நாங்கள் முதன்முதலில் கற்ற பாடல் ஆத்மா ராமா! ஆனந்த ரமணா! . நன்றி: @sandepantz , நேயர் விருப்பத்திற்காக பாடியமைக்கு. இப்பாடலின் மிகச்சமீபத்திய வடிவம்: இந்த ஒரு பாட்டை மட்டுமே அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நாங்கள் 'சாதனை' செய்ததாக ஞாபகம். அக்கம்-பக்கத்தாரெல்லாம் எங்கள் இசையை விரும்பிக் கேட்பதாக நினைத்த நினைவும் கூட. ஒவ்வொரு சனி-ஞாயிறும் காலை 8 மணிக்கு பாட்டு வாத்தியார் வீட்டில் அப்பா கொண்டு விடுவார். தாமதமாக ஆரம்பித்து சரியாக 8:55 ஆனதும் அங்கிருந்து அடுத்த வீட்டுக்குள் நுழைந்து ஸ்ரீ கிருஷ்ணா தொடர் காண சென்று விடுவோம். முதல் நாளில், யாரோ இரு சிறுவர்கள் தங்கள் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சி பார்க்கக் கேட்டதும் அவர்களுக்கு என்னவோ போல் இருந்திருக்க வேண்டும்; பிறகு பழகியிருக்கும

தோழி!

கைவிரல் பட்டதும் நெஞ்சிலே ஓர்நொடி ஆழிப் பேரலை வருவதேன ் தோழி ! கைப்பேசியில் நீ அழைத்திடும் போதெலாம் உள்ளம் ஓர்முறை பதைப்பதேன் தோழி ! பேருந்திருக்கையில் நீ அமர்ந்திருக்கையில் ஜன்னல் வழியுலகம் கண்டுதான் ரசிக்கையில் ரசித்திடும் கண்களின் கண்ணிமை மையினை க் கண்டுதான் என்மனம் பூரிப்பதேன் தோழி ! தடுமாறும் போல்செல்ல உன்கரம் பிடித்ததும் ஏதும் ஏற்படாது நீ சென்று விடுகையில் தீ - வலம் வருவார்போல் நான் கட்டும் கோட்டைகள் எண்ணிக்கை எடுத்துரைக்க வயதில்லை தோழி ! நாளொன்று போனதும் நிசியெலாம் நான்காணும் கனவுகள முழுவதும் நீ வந்திருந்தாலும் அருகில் அமர அங்கில்லை என்றதுமே அலைகள் யாவும் அனல்களடி தோழி ! இவ்வாறு நான்கொண்ட குமுறல்கள் ஓர்புறம் மண்டிப் புதைந்து மண்ணாகிப் போனதும் மந்திரம் இட்டார்போல் மனமோ இன்றிங்கு வேறெதோ வேலைகள் விரும்புதடி தோழி ! மணமகன் அறைக்குள் மாந்தர்பல சிரிக்கையில் மனமதன் மாற்றத்தை நான் புரிந்திருக்கையில் ஒருகணம் உன்னிடம் வாய்திறக