எ-ஏ
Share
எ-ஏ
நாளொரு வீதியும் பொழுதொரு மார்க்கமும்
புல்லுக்கும் பயனிலாக் கசக்கின்ற வாழ்க்கையும்
பால்தேன் பருப்புமிவை கொண்ட நாளிலும்
மனம் மட்டும் மங்கிக் கிடப்பதேனோ !
அப்போது சுகம்தரும் நீரான மதுவோ ?
காலனைக் காணாது கொள்கின்ற மண்ணோ ?
அங்கத்து மிளிர்தரும் உலோகப் பொன்னோ ?
அங்கமே மிளிர்கின்ற பூலோகப் பெண்ணோ ?
வாழ்வதன் விளைவென்ன துளிகூட காணேன்
வாழ்வுதன் வழியென்ன, இம்மியும் அறியேன்
வாழ்தலென்பது வெற்று காற்றுள்ள தேகமோ ?
காற்றல்ல தேகத்தைச் சுற்றமும் போற்றுமோ ?
கண்ணிலே காண்கின்ற இவைவெறும் காணலோ ?
மண்ணிலே மாய்கின்ற காயமோர் நானலோ ?
விண்ணிலே வாழ்கின்ற உயிரென்ப துள்ளதோ ?
இவையெலாம் அறிந்தாலும் அழிவொன்றுமுள்ளதோ !
PS : Any one guess the meaning behind the title...? :)