Posts

Showing posts from 2012

உன்னைக் கண்டேன் பெண்ணே

Image
கர்நாடக சங்கீதத்தில் எனக்கு ஈடுபாடு  மிகவும் அதிகம். எவ்வளவு அதிகம் என்றால், நான் நுழைந்து அதை அவமரியாதை செய்யக் கூடாது - என்ற அளவுக்கு அதிகம். எனக்கு 7 அல்லது 8 வயது இருக்கும்போது, முதல் முறையாக நானும் என் தங்கையும் "பாட்டு  க்லாஸ்" சென்ற ஞாபகம். நாங்கள் முதன்முதலில் கற்ற பாடல் ஆத்மா ராமா! ஆனந்த ரமணா! . நன்றி: @sandepantz , நேயர் விருப்பத்திற்காக பாடியமைக்கு. இப்பாடலின் மிகச்சமீபத்திய வடிவம்: இந்த ஒரு பாட்டை மட்டுமே அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நாங்கள் 'சாதனை' செய்ததாக ஞாபகம். அக்கம்-பக்கத்தாரெல்லாம் எங்கள் இசையை விரும்பிக் கேட்பதாக நினைத்த நினைவும் கூட. ஒவ்வொரு சனி-ஞாயிறும் காலை 8 மணிக்கு பாட்டு வாத்தியார் வீட்டில் அப்பா கொண்டு விடுவார். தாமதமாக ஆரம்பித்து சரியாக 8:55 ஆனதும் அங்கிருந்து அடுத்த வீட்டுக்குள் நுழைந்து ஸ்ரீ கிருஷ்ணா தொடர் காண சென்று விடுவோம். முதல் நாளில், யாரோ இரு சிறுவர்கள் தங்கள் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சி பார்க்கக் கேட்டதும் அவர்களுக்கு என்னவோ போல் இருந்திருக்க வேண்டும்; பிறகு பழ...

தோழி!

கைவிரல் பட்டதும் நெஞ்சிலே ஓர்நொடி ஆழிப் பேரலை வருவதேன ் தோழி ! கைப்பேசியில் நீ அழைத்திடும் போதெலாம் உள்ளம் ஓர்முறை பதைப்பதேன் தோழி ! பேருந்திருக்கையில் நீ அமர்ந்திருக்கையில் ஜன்னல் வழியுலகம் கண்டுதான் ரசிக்கையில் ரசித்திடும் கண்களின் கண்ணிமை மையினை க் கண்டுதான் என்மனம் பூரிப்பதேன் தோழி ! தடுமாறும் போல்செல்ல உன்கரம் பிடித்ததும் ஏதும் ஏற்படாது நீ சென்று விடுகையில் தீ - வலம் வருவார்போல் நான் கட்டும் கோட்டைகள் எண்ணிக்கை எடுத்துரைக்க வயதில்லை தோழி ! நாளொன்று போனதும் நிசியெலாம் நான்காணும் கனவுகள முழுவதும் நீ வந்திருந்தாலும் அருகில் அமர அங்கில்லை என்றதுமே அலைகள் யாவும் அனல்களடி தோழி ! இவ்வாறு நான்கொண்ட குமுறல்கள் ஓர்புறம் மண்டிப் புதைந்து மண்ணாகிப் போனதும் மந்திரம் இட்டார்போல் மனமோ இன்றிங்கு வேறெதோ வேலைகள் விரும்புதடி தோழி ! மணமகன் அறைக்குள் மாந்தர்பல சிரிக்கையில் மனமதன் மாற்றத்தை நான் புரிந்திருக்கையில் ஒருகணம் உன்னிடம் வாய்...

வாழ்க்கை

வாழ்க்கை வாழ்க்கை ஸ்தம்பித்தது. இருள் அவன் அருகில் நின்றுகொண்டு வெளிச்சத்தை சிறிதும் எட்ட விடாமல் இறுமாப்புடன் சிரித்தது. நீர் வற்றிப்போய் கண்கள் செய்வதறியாது தவித்தன. உடலில் உள்ள ஒவ்வொருதுளிக் குருதியும் உறைந்தது. தலை சுற்றியது. மனம் மூழ்கியது. இவை அனைத்தும் இவ்வாறிருந்தும்கூட அப்பொழுதும் மூளை வேதாந்தம் பேசியது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து மூளையை மட்டுமே கேட்டு நடந்ததற்கான விளைவு - சற்று முன் நிகழ்ந்தேறியது. நேற்றைய முன் தினம் "டேய் நீ உள்ள வரப்போறியா இல்லையா?", என்றாள் வாசுகி. "கோவிலுக்குள்ள தான் உங்க சாமி இருக்கா? ஏன், வெளிலேருந்தே கும்பிட்டா போறாதா?" தன் வழக்கமான மொழியில் கேட்டான் வாசுதேவன். "சரி, உன்ன திருத்த முடியாது! நா ஒரு பத்து நிமிஷத்துல வந்துட்றேன், கொஞ்சம் இங்கேயே இரு! பொண்டாட்டிய விட்டுட்டு போன பாவத்த வாங்கிக் கட்டிக்காத!" என்று செல்லமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். "சரி, போறது தான் போற, அப்படியே எனக்கும் சேர்த்து ஏதாவது வேண்டிக்கோ!" "இவனுக்கு இனிமேலாவது நல்ல புத்திய குடு-ன்னு வேண்டிக்கறேன்" என்று சொல்லிக்கொண்டே சென்றுவி...

ஆறுதல்

கண்ணீரே காணாது கவலைகள் இன்றி நான் சுற்றித் திரிந்த நாட்கள் இனி இல்லை . கள்ளங் கபடம் ஏதும் இன்றி நான் சிரித்துப் பேசிய நிமிடங்கள் இனி இல்லை . தத்தித் தடுமாறி தவழ்ந்த அந்நினைவெல்லாம் எப்போதும் நினைவில் வந்ததாய் நினைவில்லை . வருவார் போவாரெலாம் தூக்கிக் கொஞ்சிய அழகிய முகமும் அழகாய் இனி இல்லை . ஓடிப் பிடித்து ஆடிய நண்பர்கள் கூப்பிடும் தூரத்தில் இப்போது இங்கில்லை . உடன் விளையாடிய நண்பர்களுக்கும் எனக்காண நேரம் என்பதே ஒருபோதும் வரவில்லை . கீழே விழுந்து மண்ணில் புரண்டு முழங்கை முட்டி அனைத்தும் சிராய்த்து பீறிட்ட ரத்தத்தில் கைப்பிடி மண்தூவி மகிழ்ச்சியாய்ச் செலவிட்ட நிமிடங்கள் இனி இல்லை . நாளொரு ஊர்சென்று பலரையும் சந்தித்து பணமீட்டிப் பொருள் சேர்க்கும் புத்தியும் இருந்தாலும் ஆளுக்கொரு தூண்கொண்டு அகமகிழ்ந்த அந்நாட்கள் அழுது புரண்டாலும் வரப்போவதும் இல்லை . ' இது தான் வாழ்க்கை , மறுப்பதற்கே இல்லை ' என்றொரு பக்குவம் ஒருபக்கம்...

Belur & Halebidu - II

Image
So we came out of the Hoysaleshwara Temple Complex  and  proceeded to the nearby Jain Temples. There was a single complex with huge shrines for 3 deities: Aadhinatha , Paarshvanatha & Shaanthanatha . And as with most other ancient temples, there were intricate sculptures all over, not wasting an inch. There was HUGE statue of a Thirthankara, must be one of the 3 I had mentioned earlier, but don't know who. Made of a SINGLE rock, he looks magnificent, with a serpentine holding his back and serving as an umbreall. And there's a signature smile - which is the best of anything you'd come by. And another one, again, forgot who - was just standing there, with nothing adorning him. Nirvana, perhaps. But philosophy aside, I loved the hairstyle! I'm even sporting a similar one now! ;) A *slightly* revamped version of the last one. Just for a wallpaper with a dark background. Well, with the Shiva temple right next to this comple...

Belur & Halebidu - I

Image
On the night of 3rd Feb '12, two guys rushed through the crowds at the Majestic Bus Terminus at Bangalore, and found themselves a pair of seats in a bus that would take them somewhere to witness the awesomeness of the Hoysala Empire , which would be clear in their majestic & intricate carvings of their Gods and demi-gods and courtiers and countrymen! The Hoysalas had ruled for nearly 4 centuries, and the temples of Belur, Halebid & Somnathpur had taken them more than some 150 yrs! This was the route for the whole journey. The bus to Belur started from Bangalore, by 10:30, and somewhere in the bus, I was non-stoppingly & nonsensically chatting with Veerabhadram on topics like History, Mythology, etc, just to realize that I didn't even *still don't* know a percentage of what he does! Well, the only thing I remember cribbing abt was he not bringing his iPad along, for we could read something in the dim light. Nyway, we slept off as early as 12 or 1, just to w...