வாழ்க்கை
வாழ்க்கை வாழ்க்கை ஸ்தம்பித்தது. இருள் அவன் அருகில் நின்றுகொண்டு வெளிச்சத்தை சிறிதும் எட்ட விடாமல் இறுமாப்புடன் சிரித்தது. நீர் வற்றிப்போய் கண்கள் செய்வதறியாது தவித்தன. உடலில் உள்ள ஒவ்வொருதுளிக் குருதியும் உறைந்தது. தலை சுற்றியது. மனம் மூழ்கியது. இவை அனைத்தும் இவ்வாறிருந்தும்கூட அப்பொழுதும் மூளை வேதாந்தம் பேசியது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து மூளையை மட்டுமே கேட்டு நடந்ததற்கான விளைவு - சற்று முன் நிகழ்ந்தேறியது. நேற்றைய முன் தினம் "டேய் நீ உள்ள வரப்போறியா இல்லையா?", என்றாள் வாசுகி. "கோவிலுக்குள்ள தான் உங்க சாமி இருக்கா? ஏன், வெளிலேருந்தே கும்பிட்டா போறாதா?" தன் வழக்கமான மொழியில் கேட்டான் வாசுதேவன். "சரி, உன்ன திருத்த முடியாது! நா ஒரு பத்து நிமிஷத்துல வந்துட்றேன், கொஞ்சம் இங்கேயே இரு! பொண்டாட்டிய விட்டுட்டு போன பாவத்த வாங்கிக் கட்டிக்காத!" என்று செல்லமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். "சரி, போறது தான் போற, அப்படியே எனக்கும் சேர்த்து ஏதாவது வேண்டிக்கோ!" "இவனுக்கு இனிமேலாவது நல்ல புத்திய குடு-ன்னு வேண்டிக்கறேன்" என்று சொல்லிக்கொண்டே சென்றுவி...