Posts

Showing posts from January, 2014

ஒத்தையில போகயில

ஒத்தையில போகயில உன் நெனப்பு அள்ளுதடி! சுத்தியல போலடிச்சு உஞ்சிரிப்பு கொல்லுதடி! கடல் காத்து வாங்கப் போனா அனல் காத்து வீசுதடி! கடலய பாத்து பாத்து கண்ணோஞ்சு போகுதடி! அடி நடமாடும் அழகு நெத்திலியே! உன்ன சிலையாக்க மெழுகு பத்தலியே! அடி வாடாத வெளுத்த வெத்தலயே! நீ இல்லாம ஒலகம் சுத்தலயே! நாங் கடையில் டீ குடிக்க அந்த வழி நீ நடக்க தேனீரா இருந்த தண்ணி தேனா இனிக்குதடி! பஞ்சப்போல நீயும் பேச மண்ணும் பொண்ணாகுதடி! நெஞ்சு உன்னப் பாக்காம புண்ணாகிப் போகுதடி! அடி நீ தான் என் சீனி மிட்டாயே! கொஞ்சம் பாக்காம தவிக்க விட்டாயே! பாவிப் பய நெஞ்சில் ஆச நட்டாயே! நட்டு கழலவிட்டு ஓட விட்டாயே! ஒத்தையில போகயில... PS: Inspired by Sean Roldan & friends. Though nowhere close to theirs, one's own absurdities.