மண்ணின் மடமை
இது, ஒரு முழுதும்-பக்குவமடையாச் சிறுவனின் சினமே தவிர, வேரொன்றும் பெரிதல்ல. மேலும், இதில் காணும், சாதி-மதம்-சார்ந்த எண்ணங்கள் ஓர் உபமானத்துக்காகவே தவிர, முழுதும் உண்மையும் அல்ல. மண்ணின் மடமை கல்லுளத்தார் உலகத்தில் கனியுளத்தான் நான் உளனேன் ? மண்ணுளார்ச் சமூகத்தில் மனமுடையான் நான் தவிப்பதுவேன் ? செல்வந்தர் ஆட்சிதனில் செவியுடையான் நான் சாவதுவேன் ? அநீதியே அறமாதலின் அன்புடையான் நான் அரிவதுமேன் ? வையத்து வாழ்க்கை வாளினாலே யாயின் வெண்சாமரம் கொண்ட தெய்வங்களேன் ? இரத்தம் இலாததோரிரவு மில்லையேல் இரக்கம் இருக்கும் இதயங்களேன் ? உணவும் உடையும் உறக்கமும் இல்லையெனில் உடுக்கை அடிப்பார் உளரல்களேன் ? பசியும் பட்டினியும் பாருடைமை யாயின் பாஞ்சசன்னியத்தான் பாசுரம் ஏன் ? கண்ணீர் இடுக்கில் கண்கள் காண்கையில் கல்லில் குடிகொண்ட கடவுள்களேன் ? வேர்களும் வலிமை இழந்தே யிருக்க வெற்றுக் காகித வேதங்களேன் ? கைப்பிடிச் சோறும் கண்ணில் படாது கோபுரக் கலசம் களிப்பதுமேன் ? சோறுடைத்திருந்த சோழர்தன் நாடுதனில் நெல்லுக்கும் நீரிலா திருப்பதுமேன் ? விண்ணெலாம் விரிந்த வள்ளுவன் வாக்குமே வானில் ...