நலமறிய

மூசுக்காற்றும் முக்கிச் செலுத்தி
நாட்கள் நகர்த்தி நரைகள் ஏற்றி
மூப்பை மோர்ந்து முன்னே செல்லும்
நாயைப் போல நலமாய் உள்ளேன்.

அற்பப் பேறில் ஆசைகள் வைத்து
விருப்பு வெறுப்பை எல்லாம் தொலைத்து
அழகின் அழுக்கும் அருகே வராது
விதையா விதையாய்ச் செழிப்பாய் உள்ளேன்.

மதியின் மதியை மதியாதுறங்கி
குன்றிக் கிழிந்துக் கண்கள் இறங்கி
மடைகள் மீறிப் பொடலே தங்கும்
கும்பிக் கழிபோல் மதிப்பாய் உள்ளேன்.

ஊரிடைக் காகம் போல்திரிந் தோடி
கூறிட நாளுக் கொருசெவி நாடி
ஊனுடை ஊற்றும் உலர்ந்தே வாடி
கூனிடை கூடிக் களிப்பாய் உள்ளேன்.

Comments

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

வேண்டாம் மைத்துனா வேண்டாம்!

Belur & Halebidu - II