கண்ணன் அனுபூதி by Crazy Mohan
திரு.கிரேஸி மோகன் அவர்களின் 70-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவர் இயற்றிய ' கண்ணன் அனுபூதி '-யில் இருந்து சிலவெண்பாக்கள் இசைத்து வழங்கப்பட்டன. அவற்றை இங்கு தொகுக்க முயற்சித்துள்ளேன். விரைவில், இன்னொரு நிகழ்ச்சியில் இவை இன்னும் விரிவாகஇசைக்கப்படும் என்று திரு. மாது பாலாஜி அவர்கள் தெரிவித்தார். ஏதேனும் பிழைகள் இருக்குமாயின் தெரியப்படுத்தவும். நன்றி! கண்ணபிரான் காயாம்பூ வண்ணபிரான் வெண்ணைமண் தின்னபிரான் நற்கீதை சொன்னபிரான் பின்னமுரான் முன்னவனாம் தென்மதுரை அன்னையவள் அண்ணனையே எண்ணவரும் ஏகாந்தம் இங்கு நானாய் பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில் இறந்து இல்லையாவது எதற்கு சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்கு அரணாய் நிற்கும் அரியே எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை உதிக்கின்ற ஞானமே எல்லாம் மதித்துத் துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும் நதிக்கரை நாணல் நீர் நட்பு இருப்பதிங் கொன்றே இதன்பெயர் கண்ணன் மறுப்பதை விட்டென் மனமே கருப்பொருளைப் பார்க்காத போது பாடிப் பரவசத்தில் கார்கால மேகத்தில் காண் களிப்பில் திளைத்துக் களைத்துச் சலித்து புளிக்கும் பழமாம் இப்பூமி ஒளித்த நிலத்தை வராகமாய் நெம்பிய ஆய க...