Posts

Showing posts from October, 2019

தனித்தணி

ஆழி கடந்தப்பா லிங்குவந் தேறிட ஊழி கடிந்தெப்பா லிங்குசென் றோடிட பாழி குடைந்திப்பா லூனுயிர் வாடிட தன்னந் தனியே தணி! *ஊழி = உலகு; எப்பால் = எவ்விடமும்; பாழி = வெறுமை தணி = ஆறு (இது பல விகற்ப இன்னிசை வெண்பா)

சிந்தா மணி

உன்பா லளவிலா பற்றுள் ளவனடி என்பா லுவந்தோதி போதித் தருளடி அன்பா லியம்பமு தாயோர் அளவடி வெண்பா தினம்சிந் தடி! (இது பல விகற்ப இன்னிசை வெண்பா)