கானல் காணல்
அருவமே கொண்ட அகிலத்தான் தனை ஆதியி லாதவன் ஆதவன் தான்தனை இன்னா இருப்பினும் இனியவன் இறைவனை ஈன்று இளைத்திடா ஈகையுள்ளான் தனை உருவத்தில் உடுக்கி உரைத்திடக் கண்டேன் ஊமை நானொரு ஊகமும் கொண்டேன் எண்ணம் பிசகி எழாமல் இருக்கையில் ஏக்கம் பெருகும் ஏவுதல் கண்டேன் ஐம்பொருள் படைத்தானை ஐந்திணை செய்தானை ஒருவரும் ஒழுங்கே ஒழுகாது ஒருபுறம் ஓதிக் காலம் கழித்திடக் கண்டேன் கற்றளி கண்டேன் கற்றளி கண்டேன் கற்றளி எல்லாம் கற்கள் கண்டேன் கர்ப்ப க்ரஹமென் றோரறை கண்டேன் கல்லுளி கண்ட கண்ணிரு கண்டேன் சாதிகள் கண்டேன் சாத்திரம் கண்டேன் சந்ததி யெல்லாம் சாய்ந்திடக் கண்டேன் சாதிப்போ ரையும் சனங்கள் சூழவும் சாதிப் போரொன்று செழித்திடக் கண்டேன் தாமிரம் கண்டேன் தங்கமும் கண்டேன் தந்தமும் ஆங்காங்கு தேய்ந்திடக் கண்டேன் தீண்டா வகுப்பினர் தவித்தே யிருக்க திண்பண்ட மெல்லாம் தீயினில் கண்டேன் நான்முகன் கண்டேன் நன்கறிந்தவர் கண்டேன் நன்னாற்றமே கொண்ட நாணயத்தார் கண்டேன் நீருமே இலாது நிற்பார் இருக்கையில் நால்வேதம் ஊரெலாம் நலம்பெறக் கண்டேன் பொற்சிலை கண்டேன் பொற்சிலை கண்டேன் பன்னீரும் பழமும் பாலும் பருப்பும் பூவு...