Posts

Showing posts with the label கவிதை

சபையர்* கோன்

இடர்பொழு தெல்லாம் இலகுவாய் நீங்கத் தளர்ந்திடா நானும் உயர்வழி நாடச் சுடர்சுடா மன்னா அரவம்சூழ் நீல மிடறா உறுதுணை நில். (மிடறு = கழுத்து) *Sapphire. I started working with "நீலமணி மிடற்றா", but had to chop it off to fit into the metre.

இராசராசப்பா

கிள்ளி வழியுதித் தோங்கியு யர்ந்தானை கிள்ளைத் தமிழ்தேவா ரத்தினை மீட்டானை அள்ளிப் பெருஆ வுடையார் அளித்தானை சொல்லிப் புகழ்பா டிடு. சோழர்களில் கிள்ளி வளவன் வழிவந்து புகழில் ஓங்கி உயர்ந்தவனை கிளி பேசும் கொஞ்சும் தமிழனுடைய தேவாரத்தினை மீட்டவனை பொருளை அள்ளிப் பெருஆவுடையார் கோயிலை அளித்தவனை அவனது பெயர் சொல்லிப் புகழ்பாடிடு. சிங்கத் தமிழ்நாடி மீட்டபெரு கோவுடைய வங்கத் தெறுழ்தேடி வென்றவொரு சேயுடைய தங்கக் குமிழ்மூடி கொண்டபெரு ஆவுடைய ராசரா சன்புகழ் நில். சிங்கத்தமிழை மீட்ட பேரரசனுடைய (/ இராசராசனுடைய) வங்கத்து வலிமையைத் தேடிச் சென்று வென்ற இராசேந்திரனை மகனாய் உடைய தங்கக் குமிழ் மூடி போர்த்தியது போல் கோபுரத்தைக் கொண்ட பெருஆவுடைய இராசராசனின் புகழ் நிற்கட்டும்.

திருச்சிற்றஸ்பழம்

அருகிடா தின்னல் எட்டிப் போகச் சிறுகிடா செல்வம் ஊருக் கீகப் பருகிடா தமுதினும் மேலாக இன்பம் தருகடா ரங்கா!

மாவடு

வருமா காலம் காத்துக் கிடந்து விருமான் அருளத் திருமா மிளிர்ந்து பெருமானிடத்துப் பல்பிணி போக்கும் சின்னஞ் சிறுமா வடு. P.S. Does this quality to be labelled a வெண்பா?