Posts

Showing posts from 2011

மண்ணின் மடமை

இது, ஒரு முழுதும்-பக்குவமடையாச் சிறுவனின் சினமே தவிர, வேரொன்றும் பெரிதல்ல. மேலும், இதில் காணும், சாதி-மதம்-சார்ந்த எண்ணங்கள் ஓர் உபமானத்துக்காகவே தவிர, முழுதும் உண்மையும் அல்ல. மண்ணின் மடமை   கல்லுளத்தார் உலகத்தில் கனியுளத்தான் நான் உளனேன் ? மண்ணுளார்ச் சமூகத்தில் மனமுடையான் நான் தவிப்பதுவேன் ? செல்வந்தர் ஆட்சிதனில் செவியுடையான் நான் சாவதுவேன் ? அநீதியே அறமாதலின் அன்புடையான் நான் அரிவதுமேன் ? வையத்து வாழ்க்கை வாளினாலே யாயின் வெண்சாமரம் கொண்ட தெய்வங்களேன் ? இரத்தம் இலாததோரிரவு மில்லையேல் இரக்கம் இருக்கும் இதயங்களேன் ? உணவும் உடையும் உறக்கமும் இல்லையெனில் உடுக்கை அடிப்பார் உளரல்களேன் ? பசியும் பட்டினியும் பாருடைமை யாயின் பாஞ்சசன்னியத்தான் பாசுரம் ஏன் ? கண்ணீர் இடுக்கில் கண்கள் காண்கையில் கல்லில் குடிகொண்ட கடவுள்களேன் ? வேர்களும் வலிமை இழந்தே யிருக்க வெற்றுக் காகித வேதங்களேன் ? கைப்பிடிச் சோறும் கண்ணில் படாது கோபுரக் கலசம் களிப்பதுமேன் ? சோறுடைத்திருந்த சோழர்தன் நாடுதனில் நெல்லுக்கும் நீரிலா திருப்பதுமேன் ? விண்ணெலாம் விரிந்த வள்ளுவன் வாக்குமே வானில் வறண்

வேடிக்கை !

பலமுறை சிறகடித்தும் உனைக் கட்டியணைக்க இயலாத வண்ணத்துப்பூச்சி, உனைக்கண்டதும் ஆதித்தனை அறவே மறந்த சூரியகாந்தி, உனைக் காணவே மின்வெட்டுக்காக ஏங்கும் வெள்ளுளம் கொண்ட மெழுகுவர்த்தி, நின்பாதம் படவே முந்தியடித்துத் தரையில் விழும் மெல்லிய பூக்கள், தினமும் நின் தலை கோத, தன் பற்களை இளிக்கும் சிறு சீவி, (நீ) உறங்கியதும் உன் தலையனையிலிருந்து எட்டிப் பார்க்கும் அமைதியுரா பருத்திப்பூச்சி, நீ பார்க்கும் அவ்வோர் நிமிடம் தவிர்த்து நாளெலாம் ஏங்கும் முகக்கண்ணாடி, தனைத்தானே அடித்துக் கொண்டு உனக்காய் ஓசையிடும் ஆலயமணி, இசையறிவிலா இயற்கை இருப்பினும் உன்பால் பாடும் குறுங்குருவி, ஒளியைக் கண்டதும் வெளியே குதித்து நீயென்றறிந்த செந்தாமரை, தன்தேவை இனியில்லை என்றே அறிந்தும் கடமைக்குக் கதிர்வீசும் காலைக் கதிரவன், தனக்கின்றி உனக்கே 'சந்திரமதி' என பெயர்சூட் ஏவலுக்கேங்கும் சந்திரன் மதி, வர்ணிக்க மூளை இல்லையென் றுணர்ந்தும் மனதார முயற்சிக்கும் மூடன் நான் ! வேடிக்கை தான் !

Kamarasavalli Chaturvedimangalam

Image
This weekend somehow turned out to be exciting. Got to visit a temple supposedly built by a Chola King in the 8th / 9th century The temple predates the great Brihadeeshwara Temple a.k.a. Big Temple @ Tanjore. It's located at a remote village called Kamarasavalli Chaturvedimangalam was a good distance of around 35 kms from our place. Just for a ref., it's around 35 kms from Thanjavur . On the way, our 19-yr old bike ran out of petrol and somehow we managed to get a litre, @ 10 Rs. more. And when we reached, we had sensed that the distance was worth it. Rennovation is on the go there at the temple and is expected to be completed in the next few months... Outer Wall-1 Outer Wall-2 Main Entrance Parvathi's Shrine   Inner Entrance The 2 small lions welcome at the entrance Sthala Purana - History associated The serpent Karkotaka is supposed to have sought refuge under Lord Shiva. And the the

வார்த்தையின் வேட்கை

நினைக்காண நான்வந்தும் நா - வராது போவதேனோ ! மனமுவந்து மான்வந்தும் - என் மண் - நிலாதி ருப்பதேனோ தேந்தமிழ் தீந்தமிழ் பைந்தமிழ் இவையிருந்தும் உன் அமிழ்திலாதி ருப்பது மேனோ ! நின்போல் ஒருத்தியை முன்னமே செய்யாததே பிரமனின் சிரம்கொய்ய சிவனவன் காரணமோ ! அமரர் அனைவரும் நினையறிந்திருப்ப ரெனில் பார்க்கடல் கடைதலும் தடைபட்டி ருந்திடுமோ ! ஓர்துளிப் புன்னகை கசிய நேர்ந்தாலும் வள்ளியைத் தள்ளியே வேலவன் வருவனோ ! கோபிகையர் கோபித்துக் கண்ணனும் கிடப்பனோ கோகுலக் கூட்டத்தில் கோகிலம்நீ கிடந்திருந்தால் ! பற்களைக் கண்டுதான் முத்துக்கள் தோன்றினவோ கூந்தலைக் காண - மயில் தோகை விரித்தனவோ சருமம் படர்ந்திடவே - பட்டுப் பூச்சிகள் பிறந்தனவோ கண்களைச் சுற்றிடவே - மை நிறத்தை இழந்ததுவோ ! உனையுறைக்க அகத்தியன் தமிழ்மொழி படைத்தனனோ விவரிக்க வேண்டிடவே இலக்கணம் எழுதினனோ ! பேராசை கொண்டுதான் இலக்கியம் ஆற்றினனோ பெண்ணாசை பெறுதலும் பெரியதென் றறிந்தனனோ ! -வ.ர.ராகவன்

A Tamilian's Tribute to an Apple

Image
Share Am terribly disappointed. For a lot of reasons. But the most, by one. "A man's value/influence on this society is determined by the no. of heads that mourn on this death" , it's said. A legend has just passed away. Not less than a week ago. And what have done other than FB status msgs, Twitter taggings, a few +1's and by some stone agers' Orkut scraps...? He'd never asked me to buy any of the products of his company. Neither did I care to think of it since they were more clearly overpriced. But how could such a legend not be here from India...? There has to be an Indian connection , did I think. Not that this is the only country that can host such a genius. But yet, when we don't / cant have something, it's at least a bit soothing to celebrate it as if it were ours. We Indians are still proud of Aryabhatta/Bhaskara for giving this world it's greatest digit ZERO and other jaw-dropping gyans. Be it Bhagavad Gita/Thirukkural.