வேடிக்கை !

பலமுறை சிறகடித்தும் உனைக்
கட்டியணைக்க இயலாத வண்ணத்துப்பூச்சி,

உனைக்கண்டதும் ஆதித்தனை
அறவே மறந்த சூரியகாந்தி,

உனைக் காணவே மின்வெட்டுக்காக ஏங்கும்
வெள்ளுளம் கொண்ட மெழுகுவர்த்தி,

நின்பாதம் படவே முந்தியடித்துத்
தரையில் விழும் மெல்லிய பூக்கள்,

தினமும் நின் தலை கோத, தன்
பற்களை இளிக்கும் சிறு சீவி,

(நீ) உறங்கியதும் உன் தலையனையிலிருந்து
எட்டிப் பார்க்கும் அமைதியுரா பருத்திப்பூச்சி,

நீ பார்க்கும் அவ்வோர் நிமிடம் தவிர்த்து
நாளெலாம் ஏங்கும் முகக்கண்ணாடி,

தனைத்தானே அடித்துக் கொண்டு
உனக்காய் ஓசையிடும் ஆலயமணி,

இசையறிவிலா இயற்கை இருப்பினும்
உன்பால் பாடும் குறுங்குருவி,

ஒளியைக் கண்டதும் வெளியே குதித்து
நீயென்றறிந்த செந்தாமரை,

தன்தேவை இனியில்லை என்றே அறிந்தும்
கடமைக்குக் கதிர்வீசும் காலைக் கதிரவன்,

தனக்கின்றி உனக்கே 'சந்திரமதி' என பெயர்சூட்
ஏவலுக்கேங்கும் சந்திரன் மதி,

வர்ணிக்க மூளை இல்லையென் றுணர்ந்தும்
மனதார முயற்சிக்கும் மூடன் நான் !

வேடிக்கை தான் !

Comments

Anand said…
Machi.. Loved reading da.. :)
glad u did ! thanx ! :)

*and the red carpet act is reciprocated*

Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Belur & Halebidu - II

Kuru kuru kangalile...