ஆனந்த யாழை - ஆயிரம் ஆசைகள்

'தங்க மீன்கள்' படத்தின் 'ஆனந்த யாழை' பாட்டுடனே நான் கடந்த சில நாட்களாக வாழ்ந்துவருகிறேன். இது எவ்வளவு பிடித்துப்போனதென்றால், 'குரங்கு கையில் பூமாலை' என்பார்போல் என்னால் இதைக் கொல்லாமல் இருக்க, முயற்சித்தும் முடியவில்லை. 'கழுத கெட்டா குட்டிச்சுவரு'-ன்ற மாதிரி, ஒரு காதலன் தன் காதலியைப் பாடுவார்ப்போல் எழுத முயற்சித்துள்ளேன். முதலில் அசல்.Disclaimer: The author does not take any responsibility in any way for any of the physical / mental imbalance caused by listening to this.


ஆயிரம் ஆசைகள் மூட்டுகிறாய் அன்பின்
ஆயுதத்தால் என்னை வாட்டுகிறாய்
கண்களில் கள்ளத்தனம் காட்டுகிறாய் என்
உள்ளத்தினுள் உயிர் ஊட்டுகிறாய்

இரு நெஞ்சம் பிணைந்து வாழ்ந்திடும் வாழ்க்கைக்கு
ஈடு இணை இங்கு ஏதுமில்லை.
இந்த முள்ளில் உறங்கும் அகத்தின் அழகை
நீயன்றி யாரும் காணவில்லை.

அந்த விண்ணில் பறந்து வாழுகிறேன்
என்னை நாடுகிறேன் உன்னைப் பார்த்தபடி

என் நெஞ்சம் எடுத்து ஓடிவிட்டாய்
அன்பில் மூடிவிட்டாய் கண்கள் தேடுதடி

ஆயிரம் ஆசைகள் மூட்டுகிறாய் அன்பின்
ஆயுதத்தால் என்னை வாட்டுகிறாய்
கண்களில் கள்ளத்தனம் காட்டுகிறாய் என்
உள்ளத்தினுள் உயிர் ஊட்டுகிறாய்

பார் அதன் பெண்மை தோற்க்குதடி
பெண்ணுந்தன் பாதம் பார்த்தபடி
மேகத்தின் வெண்மை வீழ்ந்ததடி
கார்வந்து பூமியில் விழுந்தபடி

அடி குயிலின் குரலும் மயிலின் மனமும்
தன்சிறம் தாழ்ந்துன்னைப் போற்றுதடி

என் நெஞ்சம் எடுத்து ஓடிவிட்டாய்
அன்பில் மூடிவிட்டாய் கண்கள் தேடுதடி

ஆயிரம் ஆசைகள் மூட்டுகிறாய் அன்பின்
ஆயுதத்தால் என்னை வாட்டுகிறாய்
கண்களில் கள்ளத்தனம் காட்டுகிறாய் என்
உள்ளத்தினுள் உயிர் ஊட்டுகிறாய்

மலர்ந்த பூவிங்கு வாடுதடி
உன்கரம் கண்டதும் பூக்குதடி
கொடிகள் வளைந்து ஆடுதடி
உன்னிடை நெளிவுக்கு ஏங்குதடி

அவை மண்ணில் முளைத்து நாட்களைக் கழித்து
பிறவிப் பயனின்று அடையுதடி

என் நெஞ்சம் எடுத்து ஓடிவிட்டாய்
அன்பில் மூடிவிட்டாய் கண்கள் தேடுதடி

ஆயிரம் ஆசைகள் மூட்டுகிறாய் அன்பின்
ஆயுதத்தால் என்னை வாட்டுகிறாய்
ஆயிரம் ஆசைகள் மூட்டுகிறாய் அன்பின்
ஆயுதத்தால் என்னை வாட்டுகிறாய்


Popular posts from this blog

A Tamilian's Tribute to an Apple

Belur & Halebidu - II

Kuru kuru kangalile...